Published : 08 Jan 2023 06:47 AM
Last Updated : 08 Jan 2023 06:47 AM
நாக்பூர்: இமயமலை எல்லை பகுதிகளில் எதிரி இலக்குகள் மீது குண்டுகளை வீசும் வகையிலான ட்ரோன்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.
இந்த ட்ரோன்களில் 5 கிலோ முதல் 25 கிலோ எடையுள்ள பொருட்களையும் கொண்டு செல்ல முடியும். இது மகாராஷ்டிராவில் நடந்த 108-வது அறிவியல் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த ட்ரோன்கள் சிக்கிம் மலைப்பகுதிகளில் 14,000 அடி உயரம் வரை பறக்கவிட்டு வெற்றிகரமாக பரிசோதனை நடத்தப்பட்டது.
30 கிலோ எடை..: 30 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லும் வகையில் இந்த ட்ரோனை மேம்படுத்தும் பணிகளை டிஆர்டிஓ மேற்கொண்டு வருகிறது. 5 கி.மீ சுற்றளவு வரை இந்த ட்ரோன் தானாக இயங்கும் திறன் படைத்தது. தேவையான இடங்களுக்கு இந்த ட்ரோன் சென்று பொருட்களை இறக்கிவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேரும். இது, எதிரி இலக்குகள் மீது குண்டுகளை வீசும் திறன் படைத்தது.
உயரமான மலைப்பகுதி எல்லை களில் இருக்கும் வீரர்களுக்கு மருந்து பொருட்களை கொண்டு செல்ல இந்த ட்ரோன்கள் உதவியாக இருக்கும் என டிஆர்டிஓ அதிகாரி மகேஷ் சாகு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT