Published : 22 Dec 2016 10:43 AM
Last Updated : 22 Dec 2016 10:43 AM
இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தனது குடும்பத்தாருடன் நேற்று திருமலைக்கு வந்து ஏழு மலையானைத் தரிசனம் செய்தார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கே, இலங்கை அமைச்சர்கள் பழனி திகம்பரம், சுவாமிநாதன் மற்றும் உறவினர் களுடன் நேற்று இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அங் கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றார்.
அங்கு தேவஸ்தான அறங் காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி மற்றும் உயர் நிர்வாக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள கிருஷ்ணா விடுதியில் குடும் பத்துடன் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் இரவு7.30 மணியளவில் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் சென்று ரணில் விக்ரமசிங்கே ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். அப்போது தேவஸ்தானம் சார்பில் அவர் களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரவு திருமலையில் தங்கிய ரணில் விக்ரமசிங்கே இன்று காலை 5.30 மணியளவில் மீண்டும் ஏழு மலையானைத் தரிசனம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT