Published : 27 Dec 2016 10:38 AM
Last Updated : 27 Dec 2016 10:38 AM

ஆந்திரா, தெலங்கானாவில் சேவல் பந்தயத்துக்கு தடை: ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சேவல் பந்தயம் நடத்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் போல, அம்மாநிலங்களிலும் பாரம்பரிய மான முறையில் சேவல் பந்தயப் போட்டிகள் நடத்தப்பட்டு வரு கின்றன. இதனால் பந்தய சேவல் கள் ஆண்டுதோறும் ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை விற்கப்படுகிறது. குறிப்பாக கோதாவரி மாவட்டத் தில் நடக்கும் சேவல் பந்தயம் மிகவும் பிரபலமானது. இந்த போட்டிகளில் சினிமா பிரபலங்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்பது வாடிக்கை.

இந்நிலையில், இந்த சேவல் பந்தயத்துக்கு தடை விதிக்க கோரி ஹைதராபாத் உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம் ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலங்களிலும் சேவல் பந்தயம் நடத்துவதற்கு அதிரடியாக தடை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் சேவல் பந்தய நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்களும், பங்கேற்பாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x