Published : 27 Dec 2022 06:38 PM
Last Updated : 27 Dec 2022 06:38 PM
புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (புதன்கிழமை) டிஸ்சார்ஜ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
63 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மதியம் 12 மணிக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT