Published : 26 Dec 2022 06:11 PM Last Updated : 26 Dec 2022 06:11 PM
ப்ரீமியம் Rewind 2022 | பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தில் இதுவரை ரூ.2 லட்சம் கோடி விடுவிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் ஜனவரி 2022 வரை 9.01 கோடி விவசாயிகள் ரூ.1,04,196 கோடி காப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் செயல்பாடு 2022-ல் எப்படி இருந்தது? - இதோ ஒரு பார்வை:
2022-23ம் ஆண்டு நிதியாண்டில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூபாய் 1,24,000 கோடியாக அதிகரிப்பு.
உணவு தானிய உற்பத்தி ஜனவரி 2022ல் 308.65 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், டிசம்பர் 2022ல் 315.72 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தி 2020-21ம் ஆண்டில் 331.05 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2021-22ம் ஆண்டில் 342.33 மில்லியன் டன்னாக அதிகரித்தது. இது இந்திய தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியில் அதிகபட்சமாகும்.
நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை ஜனவரி 2022-ல் குவிண்டாலுக்கு ரூபாய் 1940 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 2022ல் ரூபாய் 2040 ஆக அதிகரிக்கப்பட்டது.
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ஜனவரி 2022-ல் குவிண்டாலுக்கு ரூபாய் 2015ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 2022-ல் ரூபாய் 2125 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
2020-21ம் ஆண்டில் ரூபாய் 6830.18 கோடி குறைந்த பட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து 12,11,619.39 மில்லியன் டன் அளவுக்கு பருப்பு வகைகளும், எண்ணெய் வித்துக்களும் கொள்முதல் செய்யப்பட்டன. இதன் மூலம் 7,06,552 விவசாயிகள் பயனடைந்தனர்.
2021-22ம் ஆண்டில் ரூபாய் 17,093.13 கோடி குறைந்த பட்ச ஆதார விலையில் 31,08,941.96 மில்லியன் டன் அளவுக்கு பருப்பு வகைகளும், எண்ணெய் வித்துக்களும் கொள்முதல் செய்யப்பட்டன. இதன் மூலம் 14,68,669 விவசாயிகள் பயனடைந்தனர். மேலும் 2021-22 கரீஃப்பருவத்தில் ரூ. 1380.17கோடி குறைந்த பட்ச ஆதார விலையில் 2,24,282.01 மில்லியன் டன் அளவுக்கு பருப்பு வகைகளும், எண்ணெய் வித்துக்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், ஜனவரி 2022 வரை 1,37,788 விவசாயிகள் பயனடைந்தனர். 2022-23 கரீஃப் பருவத்தில் ரூபாய் 915.79 கோடி குறைந்த பட்ச ஆதார விலையில் 1,03,830.50 மில்லியன் டன் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் டிசம்பர் 2022 வரை 61,339 விவசாயிகள் பயனடைந்தனர்.
பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம், கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 3 தவணைகளாக ஆண்டிற்கு ரூபாய் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஜனவரி 2022ல் 11.74 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 1.82 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டது. டிசம்பர் 2022 வரை 11 கோடிக்கும் மேற்பட்ட தகுதியுடைய விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டது.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 29.39 கோடி விவசாயிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 2022 வரை 9.01 கோடி விவசாயிகள் ரூ. 1,04,196 கோடி காப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர். டிசம்பர் 2022 வரை இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 38 கோடியாக அதிகரித்தது. 12.24 கோடி விவசாயிகள் ரூ.1,28,522 கோடி காப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர்.
வேளாண் துறைக்கான கடன் ஜனவரி 2022ல் ரூ.16.5லட்சம் கோடி வழங்கப்பட்ட நிலையில், டிசம்பர் 2022ல் ரூ.18.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டது.
WRITE A COMMENT