Published : 23 Dec 2022 01:38 PM
Last Updated : 23 Dec 2022 01:38 PM
புதுடெல்லி: "மத்திய அரசு இதுவரையில் 220 கோடி தடுப்பூசிகள் வழங்கியுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் "ஆரோக்கியமான இந்தியா" வை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோதிராதித்ய சிந்தியா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சுகாதார பாதுகாப்பை முழுமையான சுகாதார பாதுகாப்பாக மாற்றுவதே என்பதே : பாஜக அரசின் நோக்கம். பிரதமரின் ஒரு தேசம், ஒரே ஆரோக்கியம் என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ் நாம் கரோனா தொற்றை கூட்டாக கையாண்டு வெற்றி பெற்றோம். இந்த திங்கள்கிழமை வரை 220 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் உள்டங்கிய தொலைதூரத்து பகுதிகளுக்கும் மருத்துவ வசதிகளை கொண்டு செல்வதில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சொலைதூர பகுதிகளுக்கு ரத்தம், தடுப்பூசிகள், மருந்து பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. 2014ல் நாட்டில் 6 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது நம்மிடம் 22 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாட்டில் 90 சதவீதம் மருத்துவப் படிப்புகளுக்குக்கான எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன.
தற்போது உலகில் மீண்டும் வேகமாக பரவி வரும் கரோனா தொற்று பாதிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக நேற்று (டிச.22) பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இன்று(டிச.23) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
முன்னதாக, பிரதமர் மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில்,"கரோனா பெருந்தொற்று காலம் இன்னும் முடிவடையவில்லை. தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.
கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள், சுகாதார ஊழியர்களின் தயார் நிலையை உறுதிப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக கரோனா மரபணு பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும். அனைத்து கரோனா நோயாளிகளின் மாதிரிகளை அந்தந்த மாநில அரசுகள் இன்சாகாக், ஐ.ஜி.எஸ்.எல். ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை அடுத்தடுத்து கொண்டாட உள்ளோம். இந்த நேரத்தில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமாகும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மூத்த அதிகாரிகளுடன் தற்போதைய காரோனா பரவல் சூழல் குறித்து உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...