Published : 21 Dec 2022 07:36 PM Last Updated : 21 Dec 2022 07:36 PM
ப்ரீமியம் Rewind 2022 | பழங்கால சிலைகள் மீட்பு - மத்திய கலாச்சார அமைச்சகம் செய்தது என்ன?
புதுடெல்லி: 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை 228 சிலைகள் மற்றும் விலைமதிப்பற்ற கலைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டின் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயல்பாடுகள் இப்பதிவில்...
‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ எனப்படும் விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்பது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை முன்னிட்டு, மக்கள், கலாச்சாரம் மற்றும் பல்வேறு சாதனைகளின் வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூர்வதற்கும் மேற்கோள்ளப்பட்ட சிறந்த முன்முயற்சியாக கருதப்படுகிறது. இந்த இயக்கத்தின் கீழ் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான முயற்சிகள் கலாசார அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
‘ஹர் கர் திரங்கா’ எனப்படும் இல்லங்களில் மூவண்ண தேசியக் கூட ஏற்றுதல், வந்தே பாரதம்,கலாஞ்சலி போன்ற பல மாபெரும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் 1,36,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் 23 கோடி வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இது தொடர்பான செல்பி புகைப்படத்தை 6 கோடி பேர் பதிவு செய்தனர்.
தலைநகர் டெல்லியில் பிரதமர் அருங்காட்சியகத்தை, பிரதமர் மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி திறந்து வைத்தார்.
WRITE A COMMENT