Published : 21 Dec 2022 06:59 PM
Last Updated : 21 Dec 2022 06:59 PM

ப்ரீமியம்
Rewind 2022: கரும்பு உற்பத்தியில் சிறப்பிடம்: உணவு, பொது விநியோகத் துறையில் மத்திய அரசு செய்தது என்ன?

கோப்புப் படம்

புதுடெல்லி: 2022-ஆம் ஆண்டில் உலகிலேயே முதலாவது பெரிய கரும்பு உற்பத்தி நாடாகவும், இரண்டாவது பெரிய கரும்பு ஏற்றுமதியாளராகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு நிறைவடையும் நிலையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயல்பாடுகளின் கவனத்துக்குரிய அம்சங்களை இப்பதிவில் காணலாம்.

  • ஏழைகளுக்கான பிரதமரின் ’உணவு தானியத் திட்டம்’, ‘ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டைத் திட்டம்’, ‘செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவிக்கிறது. இது தவிர,உணவு தானிங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு மனிதாபிமான உதவியின் அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டது.
  • பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் தானிய திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 90 ஆயிரத்து 997 கோடி ரூபாய் மதிப்பில் 1,118 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் மூலம் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதற்கேற்ப, உணவு அமைச்சகம் செயல்பட்டு பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம் உள்ளிட்டவற்றின் கீழ், 17 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.
  • இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக நடைமுறை சீர்திருத்திங்களின் ஒரு பகுதியாக,தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
  • மாநிலங்களுகிடையேயான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வகை செய்யும் ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை திட்டம் 2019-ம் ஆண்டில் 4 மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அது நடைமுறைக்கு வந்துள்ளது.
  • 2022-23-ம் ஆண்டு கரிப் பருவத்தில் 04.12.2022 வரை 339.88 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 29 லட்சத்து 98 ஆயிரத்து 790 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக 70ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், 187.92 லட்சம் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 37ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் குறைந்த பட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது.
  • நவம்பர் 21ம் தேதி வரை கரும்பு விவசாயிகளுக்கு 1 லட்சத்து 49 ஆயிரத்து 81 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 97சதவீத நிலுவை தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021-22 கரும்பு பருவத்தின் 110 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகிலேயே முதலாவது பெரிய கரும்பு உற்பத்தி நாடாகவும், இரண்டாவது பெரிய கரும்பு ஏற்றுமதியாளராகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.
  • ஆப்கானிஸ்தானுக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையும், திமோர் லெஸ்திக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் பாசுமதி அல்லாத அரிசியும், மொசாம்பிக் நாட்டுக்கு 500 மெட்ரிக் டன் பாசுமதி அல்லாத அரிசியும் மனிதாபிமான உதவியாக இந்தியா வழங்கியுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்புத் திட்டம் தொடர்பான இலக்கை நோக்கியும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இது, தூய எரிசக்திக்கும், பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கும் எரிச்சக்தி துறையில் இந்தியா சுயசார்பு அடையவும் உதவும் என்கிறது மத்திய அரசு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x