Published : 16 Dec 2022 05:29 AM
Last Updated : 16 Dec 2022 05:29 AM

டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டது ஷிரத்தாவின் எலும்புகள் - மரபணு சோதனையில் உறுதி

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த அப்தாப் (28), ஷிரத்தா (27)ஆகிய இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். டெல்லியில் வாடகை வீட்டில் வசித்த நிலையில் கடந்த மே 18-ம்தேதி ஷிரத்தாவை, அப்தாப் கொலை செய்தார். பின்னர் சடலத்தை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து, நாள்தோறும் ஒவ்வொரு துண்டாக வனப்பகுதியில் வீசி அழித்தார்.

ஷிரத்தா கொலை செய்யப்பட்டது கடந்த நவம்பரில் தெரியவந்தது. கடந்த நவம்பர் 12-ம் தேதி அப்தாப் கைது செய்யப்பட்டார். டெல்லி மஹரவுலி வனப்பகுதியில் இருந்து 13 எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஷிரத்தாவின் எலும்புகளா என்பதை கண்டறிய மரபணு சோதனை நடத்தப்பட்டது.

அவரது தந்தை விகாஸ் மதனின் மரபணுவுடன் ஒத்துப் போனதால் அவை ஷிரத்தாவின் எலும்புகள் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது வழக்கின் முக்கிய ஆதாரம் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x