Published : 15 Dec 2022 04:45 AM
Last Updated : 15 Dec 2022 04:45 AM

நாட்டில் 20 புதிய அணுமின் நிலையங்களை 2031-ம் ஆண்டுக்குள் தொடங்க அரசு திட்டம்

புதுடெல்லி: பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது: அதிகரித்து வரும் மின் தேவையை ஈடு செய்யும் வகையில் மின் உற்பத்தி திறனை கூடுதலாக 15,000 மெகாவாட் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, வரும் 2031-ம் ஆண்டுக்குள் உள்நாட்டில் 20 புதிய அணுமின் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 20 புதிய அணுமின் நிலையங்களில் முதலாவதாக குஜராத்தில் காக்ரபாரில் அமைக்கப்பட்டு வரும் 700 மெகாவாட் திறன் கொண்ட புதிய அணுமின்நிலையம் வரும் 2023-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் 500 மெகாவாட் திறன் கொண்ட அணுஉலை 2024-ல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. கூடங்குளத்தில் உள்ள தலா 1,000 மொகவாட் திறனில் அமைக்கப்பட்டு வரும் 2 புதிய அணு உலை பணிகள் 2027-ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சிங் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x