Published : 14 Dec 2022 08:26 PM
Last Updated : 14 Dec 2022 08:26 PM
சென்னை: வந்தே பாரத் ரயில்கள் கடந்த 6 மாதங்களில் 68 முறை கால்நடைகள் மீது மோதியுள்ளது தெரியவந்துள்ளது.
‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை - காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்திலும், 5-வது சேவை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்திலும், 6-வது சேவை நாக்பூர் - பிலாஸ்பூர் வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த வந்தே பராத் ரயில்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக, கால்நடைகள் மீது மோதி வந்தே பாரத் ரயிலின் முன்பகுதிகள் சேதம் அடைந்து வருகின்றன. இதன்படி கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் தற்போது வரை வந்தே பாரத் ரயில்கள் 68 முறை கால்நடைகள் மீது மோதியுள்ளது தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT