Published : 12 Dec 2022 10:46 AM
Last Updated : 12 Dec 2022 10:46 AM

குஜராத், இமாச்சல் தேர்தல் விதிமுறை மீறல்: சி விஜில் செயலியில் குவிந்த புகார்கள்

புதுடெல்லி: அண்மையில் நடந்து முடிந்த குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் 7000 புகார்கள் பதிவாகியுள்ளன. சி விஜில் என்ற தேர்தல் ஆணைய செயலியின் வாயிலாக பதிவான புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது.

இரு மாநில தேர்தல் தொடர்பாக 7000 புகார்கள் பதிவான நிலையில் இவற்றில் குஜராத்தில் இருந்து 6130 புகார்களும், இமாச்சல் பிரதேசத்தில் இருந்து 1040 புகார்களும் வந்துள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர் குஜராத்தில் பதிவான 6000 புகார்களில் 5100 புகார்கள் உண்மையானவை எனக் கண்டறியப்பட்டது. இவற்றில் பெரும்பாலனவை போஸ்டர், பேனர் சர்ச்சைகள் நிமித்தமானது.

இமாச்சல் பிரதேசத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான புகார்கள் கங்க்ரா பகுதியில் இருந்து பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக பிலாஸ்பூர், ஹமீர்பூர் தொகுதிகளில் பதிவாகி இருந்தன.இமாச்சலில் பதிவான புகார்களில் 75 சதவீத புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

cVIGIL என்ற தேர்தல் ஆணைய செயலியில் இந்த புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த செயலியில் பதிவாகும் புகார்களுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x