Published : 10 Dec 2022 06:06 AM
Last Updated : 10 Dec 2022 06:06 AM
புதுடில்லி: மகாராஷ்டிரா, கர்நாடக இடையே நிலவும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இரு மாநில முதல்வர்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 14-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மகாராஷ்டிரா - கர்நாடகா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை உள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி, பீதர், கார்வார் உள்ளிட்ட மகாராஷ்டிர எல்லையோர மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இதனால் எல்லையோரத்தில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மராத்திய அமைப்பினர் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
இந்நிலையில், எல்லை பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு சார்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்
பட்டது. இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மகாராஷ்டிர வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த 8 கர்நாடக அரசு பேருந்துகள் மீது சிவசேனா கட்சியினர் கல்வீசி தாக்கினர்.
இதனால் இரு மாநில எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசினார். அப்போது, மகாராஷ்டிர வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதேபோல் கர்நாடக வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
என்சிபி எம்.பி. இந்நிலையில், மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் ஷிரூர் மக்களவை எம்.பி. அமோத் கோலி, எம்.பி.க்கள் குழுவினருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து எல்லை பிரச்சினையின் தீவிரம் குறித்து எடுத்துரைத்தார். இதுகுறித்து அமோத் கோலி கூறும்போது, ‘‘மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லை பிரச்சினை பெரிதாக வெடிக்கும் நிலை உருவாகி வருகிறது.
இதை தடுத்து சுமூக தீர்வு காண்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கூறியுள்ளோம். அதற்காக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகிய இருவரையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 24-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது இரு மாநில எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது’’ என்றார்.ஏக்நாத் ஷிண்டேஅமித் ஷா பசவராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT