Published : 05 Dec 2016 08:57 AM
Last Updated : 05 Dec 2016 08:57 AM
பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையாலும், பணப் புழக்கம் குறைந்ததாலும், நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய செலவுகளுக்கே பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
எனினும் திருமண செலவுக்காக வங்கி சேமிப்பு கணக்குகளில் இருந்து ஒரே நாளில் ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. என்றா லும் பணப் புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பாத காரணத்தினால் திருமண செலவுக் காக பணம் எடுக்க முன்வருபவர் களுக்கு வங்கிகள் மூலம் ரூ.1.2 லட்சம் மட்டுமே பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
பணத்துக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தட்டுப்பாட்டால் திரு மணத்தை நடத்த முடியாமல் பலர் தவிக்கின்றனர். குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் நேற்று நடக்கவிருந்த சுமார் 50,000 திருமணங்கள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. வங்கிகளிடம் உரிய ஆவணங்களைக் காண் பித்தும் தேவையான பணத்தை வழங்காத காரணத்தினால் இந்தத் திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட் டிருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT