Published : 08 Dec 2022 08:03 AM
Last Updated : 08 Dec 2022 08:03 AM
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
குஜராத் மற்றும் இமாச்சல் தேர்தல்: மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதியும், 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. இன்று அவை திறக்கப்பட்டு, பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் பணி முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க 182 பார்வையாளர்களும் 182 தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது. காங்கிரஸ் 179 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிட்டது. ஆம் ஆத்மி 181 தொகுதிகளில் போட்டியிட்டது. இமாச்சல் பிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT