Published : 03 Dec 2022 06:20 AM
Last Updated : 03 Dec 2022 06:20 AM

21 அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு விருது பெற்ற வீரர்களின் பெயர்

தெற்கு அந்தமானில் உள்ள மனிதர்கள் வசிக்காத ‘ஐஎன்ஏஎன்646’ என்ற தீவுக்கு, பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர், தன் சிங் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இனி இந்த தீவு ‘தன் சிங் தீப்’ என அழைக்கப்படும். அதற்கான பெயர் பலகையை பாதுகாப்பு அமைச்சக மற்றும் அந்தமான் நிர்வாக அதிகாரிகள் நேற்று வைத்தனர். படம்: பிடிஐ

போர்ட்ப்ளேர்: அந்தமான் நிகோபார் தீவில் மனிதர்கள் வசிக்காத 21 தீவுகள் உள்ளன. இவற்றுக்கு ராணுவத்தில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களை வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. வீரதீர செயல் புரிந்து போரில் இறக்கும் ராணுவத்தினருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.

அந்தமானின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள மனிதர்கள் வசிக்காத ‘ஐஎன்ஏஎன்370’ என்ற தீவுக்கு மேஜர் சோம்நாத் சர்மா பெயர் வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் அந்த தீவு ‘சோம்நாத் தீப்’ என அழைக்கப்படும். இவர்தான் பரம்வீர் சக்ரா விருதை முதன் முதலில் பெற்றவர். கடந்த 1947-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பாகிஸ்தான் ஊடுவல்காரர்கள் நகர் விமான நிலையம் அருகே ஊடுருவியபோது நடந்த சண்டையில் இவர் உயிரிழந்தார். அதன்பின் இவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

அதேபோல் ‘ஐஎன்ஏஎன்308’ என்ற தீவுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற கவுரவ கேப்டன் கரம் சிங் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பரம் வீர் சக்ரா விருதுபெற்ற வீரர்களின் பெயர்கள் 21 தீவுகளுக்கு வைக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x