Published : 15 Dec 2016 01:20 PM
Last Updated : 15 Dec 2016 01:20 PM
தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் செயல்படும் மதுபானக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்தக் கடைகளுக்கான உரிமங் களை வரும் மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் அமைந்துள்ள மது பானக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி பாமக உட்பட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இம்மனுக்களில் கூறியிருப்பதாவது:
தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் அமைந்துள்ள மது பானக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி பாமக உட்பட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இம்மனுக்களில் கூறியிருப்பதாவது:
கடந்த 2015-ம் ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, முந்தைய ஆண்டில் நாடு முழுவதும் 5 லட்சம் சாலை விபத்துகள் நடந்ததில், ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் இறந்தவர் களை விட மும்மடங்கு எண்ணிக் கையில் வாகன ஓட்டிகள் காய மடைந்துள்ளனர் என்றும் கூறப் பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும், ஆந்திரா, தெலங் கானா ஆகிய மாநிலங்கள் இந்த பரிந்துரையை அமல்படுத்த வில்லை. கலால் சட்டத்தில் திருத் தம் செய்ய மறுத்து நெடுஞ்சாலை களில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்கி வருகின்றன.
மேலும், இந்திய சாலைகளில் ஒவ்வொரு நாளும் 1,374 விபத்துகள் நடப்பதாகவும், அதில் 400 பேர் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதன்படி, ஒரு மணி நேரத்துக்கு 57 விபத்துகளும், 17 மரணங்களும் நிகழ்கின்றன.
பிரேசில் நாட்டில் கடந்த 2015-ல் நடந்த சாலைப் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில், இந்தியா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து 2,200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது சாலைப் பாதுகாப்பு குறித்து நிறைவேற்றப்பட்ட பிரேசிலியா பிரகடனத்தின்படி, மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கலால் கொள்கைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பாதுகாப்பு விதிமுறை களை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன.
இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை சுட்டிக்காட்டும் பலகை களுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. நெடுஞ்சாலை களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் எந்த மதுபானக் கடையும் இருக்கக் கூடாது.
மதுபானக் கடைகள் இருப்பதற் கான விளம்பர பலகைகளும் நெடுஞ்சாலைகளில் வைக்கக் கூடாது. இத்தகைய விளம்பரப் பலகைகள்தான் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் முக்கிய அம்சமாகும். தற்போது நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளின் உரிமங்களை வரும் மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்கக்கூடாது” என்று உத்தரவிட்டனர்.
செயல் திட்டம்
இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் சம்பந்தப்பட்ட கலால்துறை அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்துடன் கலந்து ஆலோ சித்து செயல்படுத்துவது குறித்து செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசா ரணைக்கு வந்தபோது கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு உத்தரவு கள் பிறப்பித்தபோதும், மதுபானக் கடைகளை மூட மத்திய அரசு எந்த உருப்படியான நடவடிக்கை யும் எடுக்காததற்கு உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவித் திருந்தது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கைகளை மீறி, மாநில அரசுகள் கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதற்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT