Published : 01 Dec 2022 07:54 AM
Last Updated : 01 Dec 2022 07:54 AM

ஜி-20 அமைப்புக்கு இன்று முதல் இந்தியா தலைமை: 100 பாரம்பரிய சின்னங்கள் மின்னொளியில் ஜொலிக்கும்

கோப்புப்படம்

புதுடெல்லி: ஜி-20 அமைப்புக்கு இன்று முதல் இந்தியா தலைமை தாங்குவதை முன்னிட்டு, நாடு முழுவதும் சுமார் 100 பாரம்பரிய சின்னங்கள், ஜி-20 அடையாள சின்னத்துடன் மின்னொளியில் ஜொலிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜி-20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதிஅரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள், ஜி-20 அமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஏற்கும்.

இன்று முதல் ஓராண்டு காலத்துக்கு ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் சுமார் 100 பாரம்பரிய சின்னங்கள், ஜி-20 அடையாள சின்னத் துடன் மின்னொளியில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அடையாள சின்னத்தில் நமது தேசிய கொடியில் உள்ள இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய நிறங்களும் மற்றும் நீல நிற வண்ணமும் இடம் பெற்றுள்ளன. தாமரையில் பூமி உருண்டை இருப்பது போல், ஜி-20 அடையாள சின்னம் வடிவமைக்கப்பட்டு அதற்கு கீழே இந்தியா என எழுதப்பட்டுள்ளது. சவால்களுக்கு இடையில் வளர்ச்சியை, நாட்டின் தேசிய மலரான தாமரை பிரதிபலிக்கிறது. இயற்கையுடன் இணக்கத்துடன் வாழ்வதை பூமி உருண்டை குறிக்கிறது. உலகம் ஒரே குடும்பம் - வாசுதேவ குடும்பகம் அல்லதுஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதுதான், ஜி-20 அமைப்புக்கான இந்திய தலைமையின் கருப்பொருள். ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பது, உலக அரங்கில் இந்தியா முக்கிய பங்காற்றுவதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. ஜி-20 அமைப்பின் 32 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 200 கூட்டங்களை, அடுத்த ஒராண்டுக்கு நாட்டின் பல நகரங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இன்று முதல் ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவதை குறிக்கும் வகையில், நாடு முழுவதும் சுமார் 100பாரம்பரிய சின்னங்கள், ஜி-20 அடையாள சின்னத்துடன் மின்னொளியில் ஜொலிப் பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x