Published : 09 Dec 2016 06:48 PM
Last Updated : 09 Dec 2016 06:48 PM
ரூ.3,700 கோடி விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகியைக் சிபிஐ வெள்ளிக்கிழமையன்று கைது செய்தது.
எஸ்.பி.தியாகியுடன் அவரது உறவினர் சஞ்சய் தியாகி, வழக்கறிஞர் கவுதம் கைத்தான் ஆகியோரும் சிபிஐ-யினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வழக்கறிஞர் கவுதம் கைத்தான் முன்னதாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக 2013 மார்ச் மாதம் சிபிஐ எஸ்.பி.தியாகி மற்றும் 12 பேர் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்தியாவிலும் அயல்நாட்டிலும் உள்ள பல நிறுவனங்கள் ஊடாக லஞ்சப்பணம் கைமாறியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது விவிஐபிக்கள் பயணிப்பதற்காக இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. ரூ.3,600 கோடி மதிப்புள்ள இந்த உடன்பாட்டை இறுதி செய்வதற்காக அப்போது விமானப்படை தளபதியாக இருந்த எஸ்.பி.தியாகி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2014, ஜனவரி 1-ல் இந்த உடன்பாடு ரத்து செய்யப்பட்டது.
மேலும் ஊழல் குறித்தும் சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி இடைதரகர்கள் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, அவது உறவினர் சஞ்சீவ் என்கிற ஜூலி தியாகி மற்றும் வழக்கறிஞர் கவுதம் கைதானை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ‘‘ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை’’ என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி கைது பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT