Published : 29 Nov 2022 08:31 AM
Last Updated : 29 Nov 2022 08:31 AM
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் 2009 மற்றும் 2010 கால கட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது இந்த திட்டத்துக்கு துணை ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கால் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறையினர் கடந்த மே மாதம் சோதனை நடத்தினர். இதில் ரூ.17.49 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, பூஜா மற்றும் அவரது கணக்கு தணிக்கையாளர் சுமன் குமார் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்த ஊழல் விவகாரத்தில் விஷால் சவுத்ரி இடைத்தரகராக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதை யடுத்து சவுத்ரி குடும்பத்தினருடன் தலைமறைவானார். விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை நோட்டீஸ் பிறப்பித்தும் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 24-ம்தேதி தாய்லாந்துக்கு தப்பிச் செல்வதற்காக டெல்லி விமான நிலையத்தில் தனது மனைவியுடன் காத்திருந்த விஷால் சவுத்ரி தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதையடுத்து, 28-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி நேற்று ஆஜரான அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT