Published : 22 Dec 2016 08:32 AM
Last Updated : 22 Dec 2016 08:32 AM

சித்தூர், குண்டூர், விஜயவாடாவில் உள்ள ராமமோகன ராவ் உறவினர் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி சோதனை

ஆந்திராவில் உள்ள ராமமோகன ராவ் உறவினர் வீடுகள், அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ். சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று அதிகாலை திடீரென வந்த வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

ராமமோகன ராவ் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அம்மாநிலத்தின் சித்தூர், குண்டூர், விஜயவாடா, பிரகாசம் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குறிப்பாக சித்தூரில் லட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் ராமமோகன ராவ்வின் சம்பந்தி பத்ரி நாராயணா வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இவர் தெலுங்கு தேச எம்எல்ஏ சத்யபிரபா வின் மைத்துனர். அத்துடன் திரு மலை திருப்பதி தேவஸ்தான முன் னாள் அறங்காவலர் ஆதிகேசவலு நாயுடுவின் தம்பியும் ஆவார். இதனால் இவரது வீட்டுக்கு வாடகை காரில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள், தங்க ஆபரணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘திருமலை, திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் உறுப்பி னரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடு, அலு வலகங்களில் சோதனை நடத்திய தில் தமிழக தலைமைச் செயலா ளர் ராமமோகன ராவ்வுக்கு தொடர் புடைய முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதனால் இவருக்கும் முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாளையும் (வியாழக்கிழமை) சோதனை நடக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x