Published : 17 Nov 2022 07:00 AM
Last Updated : 17 Nov 2022 07:00 AM
புதுடெல்லி: மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம், ‘பழுதுபார்ப்பு உரிமை’ கொள்கையை கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இதை அமல்படுத்தும் வகையில், பல்வேறு நிறுவனங்களின் வீட்டு உபயோக மற்றும் மின்னணு சாதனங்களை பழுதுபார்ப்பதற்காக ஒருங்கிணைந்த இணையதளத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இது வாடிக்கையாளர்கள் மற்றும் சேவை வழங்குவோரை இணைக்கும் பாலமாக இருக்கும். குறிப்பாக அனைத்து பிராண்ட் மின்னணு மற்றும் வீட்டு உபயோக சாதனங்களை பராமரிப்பது மற்றும் பழுதுபார்ப்பது தொடர்பான தகவல்கள் இதில் இடம்பெறும்.
இது தொடர்பாக, சாம்சங், எல்ஜி, பிலிப்ஸ் உட்பட 23 நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், சாதனங்களின் வடிவமைப்பு விவரம், பழுதுபார்ப்பு கட்டணம், சேவை மையங்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் புதிய இணையதளத்தில் இடம் பெற்றிருக்கும். இதன்மூலம், வாடிக்கையாளர்கள் பழுதான தங்கள் சாதனங்களை அதன் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாமல் யாரிடம் வேண்டுமானாலும் கொடுத்து பழுதுபார்த்துக் கொள்ள முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT