Published : 15 Jul 2014 10:49 AM
Last Updated : 15 Jul 2014 10:49 AM

என் பெயரை பயன்படுத்தி நன்கொடை வசூலிக்க கூடாது: பவன்கல்யாண் அறிக்கை

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகருக்காக என் பெயரை உபயோகப்படுத்தி யாரும் நன்கொடை வசூலிக்க கூடாது என ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன்கல்யாண் திங்கள்கிழமை அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிய ஆந்திர மாநில தலைநகருக்காக பொதுமக்கள் நன்கொடை வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டு கொண்டதற்கு இணங்க, பலர் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர். ஆனால், இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், திங்கள் கிழமை, ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், ஹைதராபாத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அதில், ‘ஜனசேனா கட்சியின் பெயரையோ அல்லது தனது பெயரையோ கூறி யாரும் மாநில தலைநகருக்கென நிதி வசூல் செய்ய கூடாது. அப்படி செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சி, முறைப்படி தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற பின்னர், கட்சி நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x