Published : 15 Nov 2022 05:25 AM
Last Updated : 15 Nov 2022 05:25 AM
பெங்களூரு: உள்நாட்டில் தயாரிக்கப்படும் ராணுவத் தளவாடங்களை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று ராணுவ துணைத் தளபதி பி.எஸ்.ராஜு தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஏஎஸ்சி சென்டர் அன்ட் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு பெங்களூரு பிராந்திய தொழில்நுட்ப மையத்தை (ஆர்டிஎன்-பி) பி.எஸ். ராஜு நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: முன்பு ராணுவக் கருவிகளை நாம் இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.தற்போது ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
ராணுவத் தளவாட ஒப்பந்தங்களுக்காக ஆண்டுதோறும் 40 முதல் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவினர் இந்தியாவுக்கு வருகின்றனர். அவர்களுக்கு இந்த ராணுவத் தளவாடங்கள் காட்சிப்படுத்தப்படும். நமது நாட்டுத் தயாரிப்புகள் எவ்வளவு சிறந்தவை என்பது தொடர்பான தகுதிச் சான்றிதழையும் அவர்களிடம் கொடுப்போம். இதன் மூலம் நமது வெளிநாட்டு ஒப்பந்ததாரர்களுக்கு நம்மிடையே நம்பிக்கை பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.
ராணுவத்தின் நன்மைக்காக ஒட்டுமொத்த தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களை ஒருங்கிணைக்க இது பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT