Published : 15 Nov 2022 05:57 AM
Last Updated : 15 Nov 2022 05:57 AM
அர்ஜுன் முண்டா, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்
ஒவ்வொரு ஆண்டும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ம் தேதி பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, இந்தியாவின் புகழ்பெற்ற பழங்குடியின மரபு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அடையாளப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த முடிவு ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒரு வரலாற்றுத் தருணமாகும்.
“தேச விடுதலையின் அமிர்தப் பெருவிழா காலகட்டத்தில், இந்தியாவின் பழங்குடியின மரபுகள் மற்றும் அவர்களின் வீர தீர செயல்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் கம்பீரமான அடையாளத்தை வழங்க நாடு தீர்மானித்துள்ளது” என்று நமது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் 25 சதவீத பழங்குயின இன மக்களுக்கு இந்தியா இருப்பிடமாக உள்ளது. இதன் மூலம் நம் நாடு, பன்முகத்தன்மை வாய்ந்த, சிறந்த கலாச்சார பாரம்பரியம் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பழங்குடி மக்களை உள்ளடக்கியதாக உள்ளது. கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் பழங்குடியின மக்கள் தங்களுக்கான வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துகின்றனர்.
அர்ப்பணிப்பு மற்றும் விடா முயற்சி மூலம் புகழ்பெற்ற பத்ம விருதுகள் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தையும் அவர்கள் வெல்கின்றனர்.
பழங்குடியினர் இயற்கையாக திறமைகளை பெற்றிருந்தாலும், அவர்கள் மீதான புறக்கணிப்பு மற்றும் அலட்சியம் காரணமாக, தங்களது உரிமைக்கு நீண்ட காலமாக போராட வேண்டியிருந்தது.
ஆனால் இப்போது நமது ஆற்றல்மிக்க பிரதமரின் தலைமையில் அனைத்தும் மாறிவிட்டன. இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்கு முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு அமர்த்தப்பட்டது, நம் தேசத்தின் பழங்குடியினரின் மகத்தான ஆற்றல்களுக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகும்.
‘சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்’ என்ற பிரதமரின் தாரக மந்திரம் கடந்த எட்டு ஆண்டுகளாக அரசுக்கு வழிகாட்டும் கொள்கையாக செயல்பட்டு வருகிறது. முழுமையான கல்வி அறிவு வழங்குவதே நமது பிரதமரின் வளர்ச்சிக்கான மிக முக்கியமான வழிகாட்டுதல் ஆகும்.
பழங்குடியின சமூகங்களில், குறிப்பாக இளம் பெண்களுக்கான கல்வியை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாக கல்வி சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சவால்கள் உள்ளன. பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க பகுதிஅளவிலான இந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதே எங்கள் குறிக்கோள் ஆகும்.
உலகம் டிஜிட்டல் சகாப்தத்திற்கு மாறியுள்ளதால், பழங்குடியினர் நலனை விரைவுபடுத்துவதற்கும், நல்லாட்சியை நடைமுறைப்படுத்துவதற்கும், நமது அமைச்சகம் மிக சமீபத்திய தொழில்நுட்பங்களை பின்பற்றி வருகிறது. இந்த முயற்சிகள் நமது பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான அடித்தளமாக மாறிவருகின்றன.
பழங்குடியின மக்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி, தொலைதூர இடங்களில் கூடஅவர்களின் உற்பத்தி பொருட்களைவிற்க உதவ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், நமது மாநில பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சிறப்பு மையங்கள் மற்றும் துறை சார்ந்த குழுக்கள் - பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் கலாச்சார முன்னேற்றம் மற்றும் அதன் மானுடவியல் கூறுகள் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகின்றன. மேலும் இந்த நிறுவனங்கள், அவர்களின் ஆராய்ச்சி தொடர்பான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க உதவுகின்றன.
‘இந்தியா@2047’-க்கான தொலைநோக்கு திட்டத்தின் கீழ், பொருளாதார வளர்ச்சியில் புதிய உயரங்களை அடைவது, நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டிலும் மிகப்பெரிய வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் உலகின் மிகவும் மேம்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்குவது ஆகும்.
இந்த தொலைநோக்கு 2047 திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம், நிலையான வாழ்வாதாரம், வருமானம், கல்வி, சுகாதாரம் மற்றும் பழங்குடி மக்களின் பல்வேறு இன கலாச்சாரங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
எங்களின் முதன்மையான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் விளைவாக, பழங்குடியின மக்கள் இன்று சமூகத்தில் மேலும் ஒருங்கிணைக்கப்பட்டதாக உணர்கிறார்கள்.
பழங்குடியினர் நல அமைச்சகம் இந்தியாவில் பழங்குடியின மொழிகள் பலவற்றை பாதுகாத்து வளர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது. மேலும் பழங்குடியின மொழிகளில் நிபுணர்களை உருவாக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மத்திய அமைச்சகத்தின் பணியானது, பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் உறுதியான மற்றும் சிறப்பான முன்னேற்றத்தை உருவாக்குவது தொடர்பான அம்சங்களை உள்ளடக்கியது என்று நான்பெருமையுடன் கூற முடியும்.
மேலும், முக்கிய உள்ளூர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, எங்கள் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தேசியக் கண்ணோட்டத்துடன் மேற்கொள் ளப்படுகின்றன.
இந்தியா இப்போது தனது குரல் தெளிவாகக் கேட்கப்படும் மற்றும் மற்றவர்களுக்கு சமமான நிலையில் இருக்கும் அதிகார மையமாக மாறும் இலக்கை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் மூலம், இந்தியாவின் திறனை வெளிப்படுத்தவும், வளமான மக்கள் தலைமையிலான தேசத்தை உருவாக்கவும் ஒன்றாக இந்தப் பயணத்தை மேற்கொள்வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT