Published : 09 Nov 2022 05:08 AM
Last Updated : 09 Nov 2022 05:08 AM
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் எஸ்.கே.ஸ்ரீனிவாசன் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் எஸ்.கே.ஸ்ரீனிவாசன் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி) பிரமுகர் எம்.சுபேர் கொல்லப்பட்ட மறுநாள் இந்தக் கொலை சம்பவம் நடந்தது.
ஸ்ரீனிவாசன் கொலை தொடர்பாக எஸ்டிபிஐ மற்றும் பிஎப்ஐ (பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா) அமைப்பை சேர்ந்த பலரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. என்ஐஏவும் பல இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான எம்.அனில் குமார் தன்னை மர்ம நபர் ஒருவர் சனிக்கிழமை இரவு தொலைபேசியில் மிரட்டியதாக கூறியுள்ளார். சவப்பெட்டி ஒன்றை தயாராக வைத்துக்கொள் என்று மர்ம நபர் அச்சுறுத்தியதாக அனில் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பாலக்காடு தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT