Published : 24 Nov 2016 10:03 AM
Last Updated : 24 Nov 2016 10:03 AM
தெலுங்கு திரைப்பட நடிகரும் இயக்குநருமான ரவிபாபு நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஏடிஎம் முன்பு தனது வளர்ப்பு பிராணியான பன்றிக் குட்டியுடன் வரிசையில் நின்று பணம் எடுத்தார்.
தெலுங்கு திரைப்படங்களில் வில்லன், கதாநாயகன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதுடன் பல திரைப்படங்களையும் இயக்கி வருபவர் ரவிபாபு. இவர் தற்போது பன்றிக் குட்டியை மையமாக வைத்து ‘அதிகோ’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். 90 சதவீத படப்படிப்புகள் முடிந்து விரைவில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரத்தானதால், நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்க தனது வளர்ப்பு பிராணியுடன் வரிசையில் நின்று பணம் எடுத்தார். இதைப் பார்க்க பொதுமக்கள் கூடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT