Published : 19 Nov 2016 09:56 AM
Last Updated : 19 Nov 2016 09:56 AM
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மற்றும் சிலர் மீது தேசிய புலனாய்வுக் கழகம் எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தது.
ஜாகிர் நாயக்கின் அமைப்பான இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளையை மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக தடை செய்திருந்தது. அது சட்டவிரோத அமைப்பு என்ற அடிப்பையில் தடைசெய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளையின் 10 இடங்களில் தேசிய புலனாய்வுக் கழகம் அதிரடி சோதனைகளை மேற்கொண்டது. இதில் இல்லங்களும், அலுவலகங்களும் கூட அடங்கும்.
இந்நிலையில் ஜாகிர் நாயக் மற்றும் பிறர் மீது தேசிய புலனாய்வுக் கழகம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. அதாவது சட்ட விரோத அமைப்பின் உறுப்பினராக இருப்பது மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளடங்கிய சட்டப்பிரிவுகளில் இவர் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை இந்துக் கடவுகள்களை அவதூறு செய்தும், அல் கய்தா பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை உயர்த்தியும் அறிக்கைகள் வெளியிட்டது இந்த அமைப்பின் மீதான நடவடிக்கைகளுக்கு பிரதான காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் மத அடிப்படையில் மக்களிடையே ஒற்றுமையைக் குலைத்து அவர்களிடையே பகைமையை வளர்ப்பதாகவும் ஜாகிர் நாயக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT