Published : 01 Nov 2022 09:56 AM
Last Updated : 01 Nov 2022 09:56 AM
மோர்பி நகர்: பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக மோர்பி நகர் விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனை அவசர அவசரமாக தயாராவதை காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
மோர்பி நகர் விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளோரை காண பிரதமர் நரேந்திர மோடி வருவதை ஒட்டி அங்குள்ள மருத்துவமனை அவசர அவசரமாக புதுக்கோலம் தரித்து வருகிறது. மருத்துவமனையின் இடிபாடுகளை சரிசெய்து, கழிவறைகளை மாற்றியமைத்து அத்துடன் வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நேற்று தொடங்கி இரவு முழுவதும் பணிகள் நடைபெற்றன. இதனை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியினர் இதனை ஈவன்ட் ஆஃப் ட்ராஜடி (Event of Tragedy) என்று குறிப்பிட்டுள்ளனர். "பால விபத்தில் நிறைய மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்களோ ஏதோ நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கமற்றவர்கள்" என்று விமர்சித்துள்ளது.
त्रासदी का इवेंट
कल PM मोदी मोरबी के सिविल अस्पताल जाएंगे। उससे पहले वहां रंगाई-पुताई का काम चल रहा है। चमचमाती टाइल्स लगाई जा रही हैं।
PM मोदी की तस्वीर में कोई कमी न रहे, इसका सारा प्रबंध हो रहा है।
इन्हें शर्म नहीं आती! इतने लोग मर गए और ये इवेंटबाजी में लगे हैं। pic.twitter.com/MHYAUsfaoC
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மோர்பி நகருக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மோர்பி நகருக்கு நேரில் சென்று, ஆய்வு செய்கிறார். குஜராத், ராஜஸ்தானில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், தனது பல்வேறு பயணத் திட்டங்களை ரத்து செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT