Published : 24 Nov 2016 05:31 PM
Last Updated : 24 Nov 2016 05:31 PM

நெட்டிசன் நோட்ஸ்: மன்மோகன் அன்றும் இன்றும்!

ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்திய விதம் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இது 'மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்' என முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். அவரின் உரை குறித்து நெட்டிசன்களும் தங்களின் கருத்துகளை பதிவேற்றி வருகின்றனர். இதையொட்டி >Manmohan Singh இந்திய அளவில் ட்ரெண்டாகி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

>Ameeth K A

அமைதியாக, தெளிவாக, ஆர்ப்பாட்டமின்றி, அழுத்தமாக தனது கருத்துகளை இன்று மாநிலங்கள் அவையில் கூறி அனைவரையும் தன்னை பார்க்க வைத்து விட்டார் மன்மோகன் சிங்!

>Firthouse Rajakumaaren Nazeer

மன்மோகன் சிங் இன்றைய பாராளுமன்ற உரையில் மிகச் சிறப்பாக பேசி, தான்ஒரு பொருளாதார நிபுணர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

>Hari Prabhakaran

பேசாத மன்மோகன் சிங் பேசி விட்டார்..கேமரா முன் மட்டுமே பேசும் மோடி ராஜ்யசபாவில் பேசுவாரா???

>Masithurai M

வாயே திறக்காம இருந்த மன்மோகன் சிங் வாயவே திறக்க வச்சுட்டார், மோடி திறமையா வேலை செய்றார்ங்குறதுக்கு இது பத்தாதா ?? :-)

>Anbalagan Veerappan

மன்மோகன் சிங்கின் வயதுக்கேற்ற குரலில் தடுமாற்றம் இருந்தாலும் உண்மையை பேசுகிறார்... (மக்கள்) ஆபத்துல இருக்கும்போது ஆதரவா இருக்கிறவன்தான் தெய்வம்... நீர் தெய்வமய்யா!

>Vengatesh Vengatesh

"கடந்த ஆட்சியில் மன்மோகனின் மௌனத்தை விமர்சித்தவர்கள், இன்றும் மௌனம் காக்கும் மோடியை விமர்சிக்கத் தயாரா?.."

>M Harish

ராஜ்யசபையில் பிரதமர் மோடி - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். நீண்ட நாட்களுக்கு பிறகு நேருக்கு நேர்!

sheeba_v

வரலாறு என்னை புகழும்னு பதவி விலகும் போது மன்மோகன் சிங் சொன்னாரே, அதை செயல்படுத்த மோடி தீவிரமா உழைக்கிறார் #வாழ்த்துக்கள்

sasivarnan

மன்மோகன் சிங் பிரதமரா இருக்கும் போது பேசினாரா இல்லியான்னு தெரியாது. ஆனா பேச வேண்டிய நேரத்துல பார்லிமென்ட்ல பேசியிருக்காரு

sardar khan ‏

மன்மோகன் சிங்கின் முழு உரை 6 நிமிடங்கள் நீண்டது.

மோடியின் பாதி உரை 60 நிமிடங்கள் மட்டுமே.

Vivek Srivastava

மன்மோகன் சிங்கின் குரல், பாராளுமன்றத்தில் நம்பத்தகுந்த வகையில் உரத்து ஒலிக்கிறது. மற்ற எல்லோரைக் காட்டிலும் சொல்லாட்சி மிக்க உரை!!

Capt. Rohit Tanwar

ஊழல்களைப் பற்றியெல்லாம் பேசாதவர் இன்று, ரூபாய் நோட்டு மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறார்.

SajidSilawat

மன்மோகன் சிங்கின் பேச்சு, உணர்ச்சிகரமான உரை இல்ல. முன்னாள் பிரதமர் உரக்கச் சொன்ன உண்மை!

Riswan Ris

மன்மோகனின் உரையைப் பார்த்தேன். மகிழ்ச்சி. ஆனால் நாங்கள் உறுதியான தலைவரைத்தான் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தோம். அறிவாளியை அல்ல.

Rohit

மன்மோகன் அவர்களே, நாடே மாறிக்கொண்டிருக்கிறது. அதன் போக்கிலேயே செல்லுங்கள். பாருங்கள், நீங்களே இப்போது பேசத் தொடங்கிவிட்டீர்கள்!

Geethapriya Santosh ‏

கடைசியாக மன்மோகன் சிங்கின் 'மத்திய அரசின் மாபெரும் நிர்வாகத் தோல்வி' குறித்த பேச்சு- மாபெரும் உரை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x