Published : 29 Oct 2022 06:07 AM
Last Updated : 29 Oct 2022 06:07 AM
புதுடெல்லி: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், ஜம்மு காஷ்மீரில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி திரும்பினார். அமைச்சர் முருகன் தனது பயணத்தின் முதல் நாளில் குல்காமில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
குல்காமில் அவர் பேசும்போது, “ஜம்மு காஷ்மீர் முழுமையான வளர்ச்சி பெறுவதற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. குல்காம் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும், மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குல்காமில் 3,200 சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இதன்மூலம் பல்வேறு துறைகளில் 54,000 வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடையும்” என்றார்.
உள்ளூர் மீன் வளர் ப்போருடன் அமைச்சர் முருகன்கலந்துரையாடினார். அப்பகுதியில் உள்ள மீன் வளர்ப்பு பண்ணைகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது, உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும், இத்தொழிலில் ஈடுபடுவோர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலனடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அகர்பாலில் அதிநவீன கருவிகள் கொண்ட, நடமாடும் கால்நடை பராமரிப்பு வாகனத்தை எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாடர்காமில் உள்ள அதிக விளைச்சல் தரும் ஆப்பிள் பண்ணையையும் அவர் பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT