Published : 16 Jul 2014 09:22 AM
Last Updated : 16 Jul 2014 09:22 AM
பிரிக்ஸ் மாநாட்டில் பற்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாடு சென்றிருக்கும் வேளையில், மோடிக்கு பதிலாக ‘பொறுப்பு’ பிரதமர் யார் என்பதில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதில் ‘நம்பர்-2’ யார் என்பதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண்ஜேட்லி இடையே கடும் போட்டி நிலவு வதாக கூறப்படுகிறது.
பிரதமர் வெளிநாட்டில் இருக் கும்போது, அவர் இல்லாத நேரத் தில் நாட்டில் எழும் முக்கிய பிரச்சி னைகளில் முடிவுகள் எடுக்க ’பொறுப்பு’ பிரதமர் என்ற வகையில் உள்துறை அமைச்சர் அல்லது மூத்த அமைச்சர்களில் ஒருவரை நியமிப்பதும், சிசிபிஏ எனப்படும் அரசியல் ஆலோசனை வழங்கும் கேபினட் குழு (Cabinet Committee on Political Affairs) ஒன்றை அமைப்பதும் மரபாக இருந்து வருகிறது. இதில், பொறுப்பு பிரதமர்களுக்கு, பிரதமர் திரும்பிய பிறகும் முக்கியத்துவம் கிடைப்பது உண்டு.
தற்போது மோடி 5 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதால் பிரதமரை அடுத்து நாட்டின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘நம்பர்-2’ எனக் கருதப்படுகிறார். எனி னும் இவருக்கு அந்த ‘பொறுப்பு’ இல்லை எனவும், அது நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கு தான் உள்ளது எனவும் சர்ச்சைகள் செய்திகளாகி உள்ளன. கடந்த மே 26-ம் தேதி மோடி பிரதம ராக பதவியேற்றபோது, அவருக்கு அடுத்து ராஜ்நாத் சிங் பதவியேற்றார். இவருக்கு பின் சுஷ்மா ஸ்வராஜ் பதவி ஏற்க, நான்காவதாக அருண் ஜேட்லி பதவி ஏற்றார்.
இதில் சீனியாரிட்டி பிரச்சினை என்றால், அது ராஜ்நாத் சுஷ்மா இடையில்தானே வரவேண்டும் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது.
இது குறித்து பாஜக தேசிய நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறும் போது, “கட்சியை பொறுத்தவரை ராஜ்நாத்சிங் ‘நம்பர்-1’ ஆக இருந்த வர். எனவே இந்தப் பிரச்சி னையை கட்சியிலேயே சிலர் உள்நோக்கத்துடன் கிளப்ப முயல் வதாக சந்தேகிக்கிறோம். இதில் ‘நம்பர்-2’ என்ற பேச்சுக்கே இட மில்லை” என்றனர்.
இதற்காக மோடி, சிசிபிஏ முறையையே கடைப்பிடித்திருப் பதாகவும், அதில் மூத்த கேபினட் அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் என 10 பேர் உறுப்பினர்களாக இருப்பதாக வும் அந்த நிர்வாகிகள் கூறினர்.
கடந்த ஆட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடு செல்லும் போது, ஒவ்வொரு முறையும் சில மூத்த கேபினட் அமைச்சர்களிடம் பொறுப்புகளை மாற்றி மாற்றி கொடுத்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT