Published : 28 Oct 2022 06:45 AM
Last Updated : 28 Oct 2022 06:45 AM

சமூக மேம்பாட்டு இலக்குகளை அடைய இந்திய மாதிரியை பின்பற்ற வேண்டும் - நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் வலியுறுத்தல்

சுமன் பெரி

ஜாம்ஷெட்பூர்: ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட சமூக மேம்பாட்டு இலக்குகளை (எஸ்டிஜி)வரும் 2030-க்குள் நிறைவேற்ற உள்ளூர்மயமாக்கலின் இந்திய மாதிரி அவசியம் என நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

17 சமூக மேம்பாட்டு இலக்குகளை வரும் 2030-ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கால நிர்ணயம் செய்துள்ளது. வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் உணவு, நல்ல ஆரோக்கியம்- நல்வாழ்வு, தரமான கல்வி, பாலின சமத்துவம், சுத்தமான குடிநீர், சுகாதாரம், மலிவான மற்றும்சுத்தமான எரிசக்தி உள்ளிட்டவை அந்த இலக்குகளில் மிக முக்கியமானதாகும். இந்த இலக்குகளை அடைய உள்ளூர்மயமாக்கலின் இந்திய மாதிரி மிக அவசியமானவை.

எஸ்டிஜி உள்ளூர்மயமாக்கலின் இந்திய மாதிரி 4 தூண்களைக் கொண்டது. நிறுவன உரிமையை உருவாக்குதல், வலுவான மறுஆய்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பை நிறுவுதல், திட்டமிடல் மற்றும் கண்காணிப்பில் எஸ்டிஜி-யை ஒருங்கிணைப்பதற்கான திறன்களை மேம்படுத்துதல், முழு சமூக அணுகுமுறையை திட்டமிடுதல் ஆகியவை அந்த நான்கு தூண்கள் ஆகும்.

சமூக மேம்பாட்டு இலக்கு என்பது சுய-வலுவூட்டும், பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை உள்ளடக்கியவை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x