Published : 20 Oct 2022 07:01 AM
Last Updated : 20 Oct 2022 07:01 AM
புதுடெல்லி: இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல் பிரதேச சட்டப் பேரவைக்கு ஒரேகட்டமாக நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி எதிர்க்கட்சியான காங்கிரஸ், 46 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. பஞ்சாபில் பெற்ற வெற்றிக்கு பிறகு இமாச்சலில் கால் பதிக்க விரும்பும் ஆம் ஆத்மி கட்சி, 4 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஆளும் பாஜக 62 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கட்சியின் மத்திய ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு பிறகு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். பாஜகவின் 62 வேட்பாளர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள். முக்கிய வேட்பாளர்களில் தற்போதைய முதல்வர் ஜெய்ராம் தாக்குர், செராஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். புதுமுகங்களுக்கு ஆதரவாக பல இடங்களில் தற்போதைய எம்எல்ஏக்களுக்கு பாஜக டிக்கெட் மறுத்துள்ளது. வயது வரம்பும் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டுள்ள தால் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் போட்டியிடவில்லை. தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரின் தொகுதியையும் பாஜக மாற்றியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT