Published : 19 Nov 2016 09:59 AM
Last Updated : 19 Nov 2016 09:59 AM
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி உருவாகி வருகிறது. இப்போதே அங்கு தலைமைச் செயலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் பகுதி அளவில் இயங்கி வருகின்றன.
குண்டூர்-விஜயவாடா இடையே தலைநகர் உருவாகும் என கடந்த 2014-ம் ஆண்டு முதல்வர் சந்திரபாபு அறிவித்தார். இதற்காக 34 ஆயிரம் ஏக்கர் நிலம் கைய கப்படுத்தப்பட்டது. இதில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது.
இதனிடையே, அப்பகுதியில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவுவதற் காக தனியார் சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டன. இதனால், இந்தப் பகுதியில் வீட்டு மனை, விவசாய நிலங்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது.
குறிப்பாக, மங்களகிரி, தூளூரு, தாடேபல்லி, குண்டூர், விஜயவாடாவின் சுற்றுப்புறப் பகுதிகளில் ரூ.40 லட்சமாக இருந்த ஒரு ஏக்கர் விவசாய நிலம், ரூ.1 கோடி முதல் 1.5 கோடியாகி உள்ளது.
ஆனால் இந்த பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு வழிகாட்டு மதிப்பு ரூ.8 லட்சம்முதல் 16 லட்சமாக உள்ளது. இதனால் அதிக விலைக்கு நிலத்தை விற்ற பல விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் உள்ளன.
இந்நிலையில், மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவித்ததால், தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒருவேளை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தப் பணத்தை மாற்ற முடியாவிட்டால் செல்லாக் காசாகி விடும். இதனால், வாழ்வாதாரமாக இருந்த விவசாய நிலத்துடன் பணத்தையும் இழக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT