Last Updated : 24 Nov, 2016 10:14 AM

 

Published : 24 Nov 2016 10:14 AM
Last Updated : 24 Nov 2016 10:14 AM

நக்சல்களின் ரூ.20 கோடி கறுப்புப் பணம் டெபாசிட்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கடந்த 2 வாரங்களில் ரூ.20 கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

உளவுத் தகவலின் அடிப்படை யில் இந்த வங்கிக் கணக்குகளின் பணப் பரிமாற்றம் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.

இது குறித்து, சத்தீஸ்கர் மாநில நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக் கான காவல்துறை சிறப்பு இயக் குநர் துர்கேஷ் மாதவ் அவஸ்தி கூறும்போது, “நக்சலைட்கள் 2 வழிகளில் தங்கள் பணத்தை மாற்ற முயற்சிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு பணம் கொடுக்கும் ஒப்பந்தாரர்களிடம் பழைய பணத்தை திரும்பக் கொடுத்து புதிய பணம் பெற முயற்சி செய்வார் கள். இரண்டாவதாக கிராமப்புற மக்களிடம் கொடுத்து அதை அவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யச் சொல்வார்கள்.

சத்தீஸ்கரில் 8 மாவட்டங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள் ளன. பணம் டெபாசிட் செய்யப் பட்டுள்ள வங்கிக் கணக்கு விவரங்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வங்கிகளுக்கு அனுப்பி யுள்ளோம். பணப் பறிமாற்றத்தை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.

50-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கடந்த 2 வாரங்களில் சுமார் 20 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம். இந்தப் பணம் நக்சல்களுடையது என தெரியவந்தால் அவர்களுக்கு உதவியதற்காக வங்கிக் கணக்குதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x