Published : 10 Oct 2022 07:07 AM
Last Updated : 10 Oct 2022 07:07 AM
உத்தரகாசி: உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி நகரில் இயங்கும் நேரு மலையேற்ற கல்லூரியைச் சேர்ந்த 27 பயிற்சி வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் என மொத்தம் 29 பேர் கடந்த மாத இறுதியில் திரவுபதி கா தண்டா-2 மலை சிகரத்தில் ஏறினர். சிகரத்தின் உச்சியை அடைந்த அவர்கள் கடந்த 4-ம் தேதி கீழே இறங்கத் தொடங்கினர். சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் வந்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 27 உடல்களை அவர்கள் மீட்டுள்ளனர். இதில், கடந்த 7-ம் தேதி 4, 8-ம் தேதி 7, நேற்று 10 என மொத்தம் 21 பேரின் உடல்கள் உத்தரகாசிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த உடல்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நேரு மலையேற்ற கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் மாயமான 2 பேரை தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட மற்ற 6 உடல்கள் விரைவில் உத்தரகாசிக்கு கொண்டுவரப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT