Published : 08 Oct 2022 09:15 AM
Last Updated : 08 Oct 2022 09:15 AM
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா-சுப்புலட்சுமி தம்பதியின் ஒரே மகன் சைதன்யா. இவருக்கும், விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ்-தனலட்சுமி மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9-ல் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்தனர். இதற்கு சம்மதம் தெரிவித்து, பெண் வீட்டுக்கு வந்தார் மாப்பிள்ளை சைதன்யா.
அப்போது, அவருக்கு 125 வகை பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அசத்தினார் மாமியார். அவற்றை சாப்பிட முடியாமல் பாதியிலேயே எழுந்து விட்டார் மாப்பிள்ளை சைதன்யா. இதில் பல உணவு வகைகளின் பெயர் கூட அவருக்குத் தெரியாது. ஆனால், ருசியாக உள்ளது என வருங்கால மாமியாரின் கைப்பக்குவத்தை வெகுவாக பாராட்டினார் சைதன்யா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT