Published : 06 Oct 2022 06:30 AM
Last Updated : 06 Oct 2022 06:30 AM
பிலாஸ்பூர்: ரூ.1,470 கோடி செலவில் பிலாஸ்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார்.
இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 1,470 கோடி மதிப்பீட்டில் தற்போது இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 247 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நேற்று காலை திறந்து வைத்தார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: 2014-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை சிறந்த முறையில் நிறைவேற்றி வருகிறோம். கடந்த 8 ஆண்டுகளில், வளர்ச்சித் திட்டங்களின் பலன்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
தற்போது உலகத் தரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை இனி பசுமை எய்ம்ஸ் மருத்துவமனை என்று அழைக்கப்படும். இமாச்சல பிரதேசத்தில் மிகவும் குறைந்த கட்டணத்தில் உலகத் தரத்தில் சுகாதார வசதிகளை அளிக்கிறோம். அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்தமருத்துவமனை அமைக்கப்பட் டுள்ளது. எனவே, இதை 'பசுமைஎய்ம்ஸ்' என்றே அழைக்கவுள் ளோம். இது இமாச்சல பிரதேச மாநிலத்தின் பெருமைமிகு அடை யாளமாக மாறியுள்ளது. மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 4 மாநிலங்களில் இமாச்சல் பிரதேசமும் ஒன்று.இதன் ஒரு அங்கமாகவே நாலகாரில்மருத்துவ சாதனை பூங்கா அமைக்கதற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் மருத்துவச் சுற்றுலாவையும் ஊக்குவிக்கவேண்டும். முதல்வர் ஜெய்ராம் தாக்குரின் முயற்சியால் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இந்த மாநிலத்துக்கு கிடைக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT