Published : 27 Nov 2016 12:47 PM
Last Updated : 27 Nov 2016 12:47 PM
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் காஷ்மீ தீவிரவாதிகளின் செயல்பாடுகள் கடுமையாக முடங்கியதாக போலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக லஷ்கர் தீவிரவாதிகள் பணத்தட்டுப்பாடினால் தங்களது மொபைல் போன் பில்களை செலுத்த முடியாமல் போயுள்ளது.
பட்காம் மாவட்டத்தில் நவம்பர் 21-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் வங்கியின் மால்போரா கிளையில் லஷ்கர் தீவிரவாதிகள் ரூ.14 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். ஆனால் 5 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். இதன் மூலமே அமைப்பின் பணத்தட்டுப்பாடு நிலவரங்கள் தெரிய வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து புல்வாமா மாவட்ட மூத்த போலீஸ் உயரதிகாரி முகமது ரயீத் பட் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, “புல்வாமாவைச் சேர்ந்த லஷ்கர் தீவிரவாதி ஆரிப் தார் அயல்நாட்டு தீவிரவாதிகளான அபு அலி, அபு இஸ்மாயிலுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினர். இவர்கள்தான் பணமின்றி இயக்கம் தவிப்பதாக தெரிவித்தனர்” என்றார்.
கொள்ளையடித்த ரூ.14 லட்சத்தில் புதிய நோட்டுகள் ரூ.3 லட்சம் ஆகும். இந்நிலையில் பழைய நோட்டுகள் ரூ.11 லட்சத்தை எப்படி மாற்றுவார்கள் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக பட்காம் மூத்த போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
காஷ்மீர் தீவிரவாதிகள் நிறைய பணத்தை செல்பேசி சிம்கார்டுகளுக்காக செலவழிக்கின்றனர். செல்பேசிகளையு சிம்கார்டுகளையும் தீவிரவாதிகள் மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். இணையதளம், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்காக தீவிரவாதிகள் மாதம் ரூ.10,000 வரை செலவழிப்பதாகவும் 100 தீவிரவாதிகளுக்குக் குறைந்தது ரூ.10 லட்சம் பணம் மாதாமாதம் தேவைப்படுகிறது என்று கைதான தீவிரவாதிகளை விசாரித்து வரும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இது போக கூரியர் செலவுகள், எரிபொருள், எல்லைப்பகுதியிலிருந்து ஆயுதங்களை எடுத்து வர உதவுபவர்களுக்கு பணம் அளிக்கும் செலவுகளும் அடங்கும்.
இதனால் மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் லஷ்கரின் தாக்குதல் திறன்களை முடக்கப்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாதிகளுக்காக நிதிமுறைகேடுகளில் ஈடுபடுவோரை போலீஸாரால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT