Published : 03 Nov 2016 02:37 PM
Last Updated : 03 Nov 2016 02:37 PM
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (ஒபஒஓ) திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட ராம் கிஷணின் இறுதிச் சடங்கு இன்று (வியாழக்கிழமை) மதியம் ஹரியாணாவிலுள்ள பாம்லா கிராமத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ராம் கிஷணின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திலிருந்து மத்திய அரசு பின்வாங்குவதாகக் கூறி டெல்லியில் முன்னாள் முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கரேவால் (69) தனது ஆதரவாளர்களுடன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
பின்பு அங்கிருந்து தனது சகாக்களுடன் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரை பார்க்கச் சென்ற ராம் கிஷண் மதியம் 1.30 மணியளவில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க காத்திருந்தபோது மயங்கிவிழுந்து இறந்தார்.
பாதுகாப்பு அமைச்சரை பார்க்கச் செல்வதற்கு முன்னரே ராம் கிஷண் விஷம் அருந்தியிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT