Published : 28 Sep 2022 04:38 AM
Last Updated : 28 Sep 2022 04:38 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை சுற்றுச்சுழல் மாசுவிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து தாஜ்மஹாலை சுற்றி பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்பட்டது. தாஜ்மஹாலை சுற்றி கடைகள் வைத்திருந்தவர்களுக்கு, 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால் இடம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கடைக்காரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டர் தூரத்துக்குள் சட்டவிரோதமாக பலர் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர் என கூறியிருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஏ.எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘தாஜ்மஹாலை பாதுகாப்பது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படுவதை ஆக்ரா வளர்ச்சி வாரியம் உறுதி செய்ய வேண்டும். தாஜ்மஹாலின் சுற்று சுவரிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு, அனைத்துவிதமான வர்த்தக நடவடிக்கைகளையும் உடனே நிறுத்த வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT