Last Updated : 03 Nov, 2016 04:32 PM

 

Published : 03 Nov 2016 04:32 PM
Last Updated : 03 Nov 2016 04:32 PM

குஜராத் உரத் தொழிற்சாலையில் எரிவாயுக் கசிவு: 4 தொழிலாளர்கள் பலி

குஜராத நர்மதா பள்ளத்தாக்கு உரம் மற்றும் ரசாயன உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவு காரணமாக 4 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவமனமாகும். புதன் இரவு ஏற்பட்ட இந்த எரிவாயுக் கசிவு குறித்து உர நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் சங்காலே, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரிடம் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகமது படேல், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

காயமடைந்த 13 பேரில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதால் வதோதரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x