Published : 14 Sep 2022 04:19 PM
Last Updated : 14 Sep 2022 04:19 PM

ராணி எலிசபெத் இறுதி நிகழ்வில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: வரும் 19-ஆம் தேதி நடக்கவுள்ள ராணி இரண்டாம் எலிசபெத் இறுதி நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கவுள்ளார். இதற்காக, இம்மாதம் 17-ஆம் தேதி லண்டன் செல்லும் திரவுபதி முர்மு இந்திய அரசு சார்பாக துக்க நிகழ்வில் பங்கேற்கிறார். இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவின் மூலம் உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டது. 70 வருடங்களுக்கு மேலாக அவர் தனது நாட்டையும் மக்களையும் வழிநடத்தியிருக்கிறார். இங்கிலாந்து மக்களின் துயரத்தில் பங்குகொள்வதுடன்,அரசக் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்,கடந்த 8-ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் காலமானார். மறைந்த ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தாலான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு நேற்று லண்டன் நகரம் வந்ததடைந்தது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x