Published : 15 Oct 2016 03:35 PM
Last Updated : 15 Oct 2016 03:35 PM
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு படிதார் அனாமத் அந்தோலன் சமிதியின் ஆதரவு உண்டு என ஹர்திக் படேல் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் குஜராத்தில் 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஹர்திக் படேல் கடிதம் மூலம் கேஜ்ரிவாலுக்கு தனது இயக்கத்தின் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில், டெல்லிவாழ் பட்டிதார் சமூகத்தினரின் உரிமைகளை நிலைநாட்ட கேஜ்ரிவால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஹர்திக் படேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, குஜராத்தின் மேஷானா பகுதியில் படிதார் போராட்டத்தை ஒடுக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்த கேஜ்ரிவால் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
குஜராத்தில் படேல் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கக் கோரி ஹர்திக் படேல் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதனால், குஜராத் மாநில அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT