Published : 04 Sep 2022 05:52 AM
Last Updated : 04 Sep 2022 05:52 AM

சட்ட ஆணைய செயல் தலைவராக நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தேர்வு

டி.ஒய்.சந்திரசூட்

புதுடெல்லி: தேசிய சட்ட ஆணையத்தின் செயல் தலைவராக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அடுத்த தலைவராக நீதிபதி சந்திரசூட்டின் பெயரை அண்மையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பரிந்துரைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு நீதிபதி சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

முன்னதாக, தேசிய சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவராக தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா ஓய்வுபெற்றதை அடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் சமீபத்தில் பொறுப்பேற்றார். இதையடுத்தே சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவராக சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x