Published : 19 Jun 2014 11:01 AM
Last Updated : 19 Jun 2014 11:01 AM
உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் பன்வாரிலால் ஜோஷியைத் தொடர்ந்து சத்தீஸ்கர் ஆளுநர் சேகர் தத்தும் தனது பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்தார்.
கடந்த ஜனவரி 2010-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியால் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக நியமிக் கப்பட்டவர் சேகர் தத். மத்தியப் பிரதேச கேடர் 1969 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான சேகர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்தவர். இவர், நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின் அவரை டெல்லிக்கு வந்து சந்தித்து விட்டுச் சென்றார்.
இந்நிலையில், சேகர் தத் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு புதன்கிழமை இரவு அனுப்பியுள் ளார். தொடர்ந்து மூன்றாவது முறை யாக சத்தீஸ்கர் முதலமைச்சராக ரமண்சிங் (பாஜக) பதவி வகிக் கிறார்.
கடந்த ஆட்சியில் அமர்த்தப்பட்ட ஆளுநர்கள் அனைவரையும் மாற்ற வேண்டும் என மோடி தலைமை யிலான அரசு கடந்த மாதம் முடிவு எடுத்ததாகக் கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை, மத்திய உள்துறை செய லாளர் அனில் கோஸ்வாமி 10-க்கும் மேற்பட்ட மாநில ஆளுநர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை உ.பி.ஆளுநர் பன்வாரிலால் ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்தபடியாக சேகர் தத் ராஜினாமா செய்துள்ளார். நாகா லாந்து ஆளுநர் அஸ்வினி குமார், எந்த நேரமும் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பார் எனக் கருதப்படுகிறது. இன்னும் சில தினங் களில் மற்றவர்களும் தம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மகாராஷ்டிரா ஆளுநர் சங்கர நாராயணன் கேரள செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஜனநாயகத்தில் எந்தப் பதவியும் நிரந்தரமில்லை. சம்பந்தப் பட்டவர்களிடம் இருந்து நேரடியாக எனக்கு உத்தரவு வந்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன். அனில் கோஸ்வாமி இரண்டு முறை போன் செய்தபோது நான் அவருக்கு பதிலளிக்கவில்லை’’ எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ‘தி இந்து'விடம் மத்திய உள்துறை அமைச்சக வட் டாரங்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆட்சியில் அமர்த்தப்பட்ட ஆளுநர் களில் சிலரது பதவிக்காலம் இன் னும் ஒருசில மாதங்களில் முடிய உள்ளது. எனவே, அவர்கள் அதை முழுமை செய்த பின் பதவி விலகுவ தாகக் கூறியுள்ளனர். இதை மத்திய அரசு ஏற்கவில்லை’’ என்றனர்.
மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் மற்றும் கோவா ஆளுநர் பி.வி.வான்சோ ஆகியோரி டம் ஹெலிகாப்டர் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரிக்க விரும்புகிறது. இதுபோல் கேரள ஆளுநர் ஷீலா தீட்சித்திடமும் விசாரணை நடை பெற இருப்பதாக அவர்கள் தெரிவித் தனர். ஆனால் ஆளுநர்களை விசாரிப்பதில் சிபிஐக்கு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
ஆளுநர்களை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசின் செயலுக்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனா லும் அரசு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை எனக் கருதப் படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT