Published : 29 Aug 2022 06:48 AM
Last Updated : 29 Aug 2022 06:48 AM
புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் முதன்மை கட்டமைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் நிர்வாக இயக்குநர் வினயக் பய் நேற்று தெரிவித்தா்.
இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மேலும் கூறியதாவது. இந்திய ஜனநாயகத்தின் மாண்பையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதத்தில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பெரியஅரசியலமைப்பு மண்டபத்தை டாடா உருவாக்கி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வறை, நூலகம், ஆலோசனைஅறை, உணவகம், பரந்த வாகனநிறுத்துமிடம் உள்ளிட்ட பல வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
முதன்மை கட்டிடப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இந்த நிலையில், தற்போது உள் அரங்கை அழகுபடுத்துவதற்கான பணிகள் மட்டும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டிடக் கலை நிபுணர்கள் ஆழமான சிந்தனைகளின் மூலம் உள் அரங்கை சிறப்பிக்கும் வேலைகளில் இரவும் பகலும் ஈடுபட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கட்டுமானத்துக்கான இடுபொருள்களின் செலவும் முன்பு மதிப்பிட்டதை காட்டிலும் அதிகரித்து உள்ளது. இவ்வாறு டாடா புராஜக்ட்ஸ் சிஇஓ வினயக் பய் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT