Published : 28 Oct 2016 09:54 AM
Last Updated : 28 Oct 2016 09:54 AM
ஆந்திரா-ஒடிஷா மாநில எல்லை யில் வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்களுக்கும், ஆயுதப்படை போலீஸாருக்கும் இடையே நேற்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாவோ யிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட் டனர். இதன் மூலம் நேற்றுவரை இப்பகுதியில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்கள் எண்ணிக்கை 30-ஐ எட்டியுள்ளது.
ஆந்திரா-ஒடிஷா மாநில எல்லையில் மல்கங்கிரி மாவட்டம், ராம் கூர்கா வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்களை ஆயுதப்படை போலீஸார் சுற்றி வளைத்ததில், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் இருதரப்புக் கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு மோதல் ஏற்பட்டது.
கடந்த திங்கள்கிழமை வரை, 28 மாவோயிஸ்ட்கள் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத னால் ஆவேசமடைந்த மாவோ யிஸ்ட்கள், தாக்குதலுக்கு பழிவாங் கும் வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத் தார் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் என, எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை மல்கங்கிரி மாவட்டம், சித்ர கொண்டா வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சூடு நடை பெற்றது. இதில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர் களிடமிருந்து 2 துப்பாக்கிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, மல்கங்கிரி அரசு மருத்துவமனையில் 28 மாவோயிஸ்ட் சடலங்களுக்குப் பிரேத பரிசோதனை நடத்தப் பட்டது. இதில் 15 சடலங்கள் அடை யாளம் காணப்பட்டன. இவை களில் 10 சடலங்கள் அவரவர் உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆந்திர மாநில டிஜிபி சாம்பசிவ ராவ் விசாகப்பட்டினத்தில் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஆந்திரா-ஒடிசா வனப்பகுதி களில் ஆயுதப்படை போலீஸார் கஞ்சா செடிகளை அழிக்கச் சென் றனர். அப்போது அங்கு இருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனால் போலீஸாரும் திருப்பிச் சுட்டதில் மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
காவலர் ஒருவரும் உயிரிழந் தார். நாங்கள் மாவோயிசத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் மாவோயிஸ்ட்களின் நடவடிக்கை களை எதிர்க்கிறோம். அவர்கள் மக்களுக்காக போராடுபவர்கள் என்றால் அவர்கள் மக்கள் மத்தி யில் இருக்க வேண்டும். வனப் பகுதிகளில் ஒளிந்துகொண்டு ஏன் போலீஸாரையும், அரசியல்வாதி களையும் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்?
முதல்வரையும், அவரது குடும் பத்தினரையும் தற்கொலைப் படை மூலம் தாக்கி அழிப்போம் என அவர்கள் கூறுவது சரியல்ல. மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய முன் வரவேண்டும். மாவோயிஸ்ட்களின் தலைவர் ராமகிருஷ்ணா சமீபத் தில் நடந்த தாக்குதலில் காயமடைந் துள்ளதாக கூறப்படுகிறது.
இவரும் இவருடன் இருக்கும் மாவோயிஸ்ட்களும் சரணடைவ தாக அறிவித்தால், ஊடகங்களின் முன்னிலையில் மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறார்கள்.
இவ்வாறு டிஜிபி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT