Published : 27 Aug 2022 04:41 AM
Last Updated : 27 Aug 2022 04:41 AM

அமெரிக்க இணை நிதியமைச்சருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

புதுடெல்லி: உலக பொருளாதார நிலவரம் குறித்து அமெரிக்க நிதித் துறை இணையமைச்சர் வாலி அடிமியோவுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

2023-ல் ஜி20 நாடுகளின் அமைப்பில் இ்ந்தியாவின் தலைமை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க நிதி துறை இணையமைச்சர் வாலி அடிமியோவுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், உலகப் பொருளாதார நிலவரங்கள், இந்திய-அமெரிக்க இடையேயான உறவில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 1 முதல் நவம்பர் 30 2023 வரை ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்று நடத்தவுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாட்டை நடத்தும் பொறுப்பும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x